மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்ற படகில் வைக்கப்பட்ட சமையல் எரிவாயுச் சிலின்டர் வெடித்ததனாலேயே குறித்த மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது
ஒரு வாரத்திற்கு தங்கியிருந்து மீன்பிடிப்பதற்கு ஆயத்தமாக குறித்த படகில் 04 பேர் கடந்த சனிக்கிழமை ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த படகிலிருந்த சமையல் எரிவாயுச் சிலின்டரில் கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிய நிலையில் அச் சமையல் எரிவாயுச் சிலின்டர் செவ்வாய்க்கிழமை இரவு வெடித்ததாக வாழைச்சேனை பொலிஸில் மேற்படி 04 மீனவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மற்றுமொரு படகில் இருந்தவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் சேதமான படகுடன் இன்று காலை கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக