புதன், 13 நவம்பர், 2013

கனேடிய பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்தனர்


news
கனடாவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிநாட்டு அமைச்சர் தீபக் ஒபராய் இன்று யாழிற்கு விஜயத்தை மேற்கொண்டு யாழ் ரில்கோ விடுதியில் காலை 10.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் தீபக் உரையாற்றுகையில்,

தான் இங்கு வந்ததன் முக்கிய நோக்கம் இலங்கையில் நடக்கும் விடயங்கள் சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடையளிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். கனடாவை பொறுத்தவரையில் இலங்கை சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

மேலும் இது சம்பந்தமாக நேரடியாக பார்வையிட தான் கனடா ஜனாதிபதி சார்பாகவே வருகை தந்ததாகவும் தெரிவித்தார்.  இங்கு வந்ததன் மூலம் யாழில் உளள் பிரச்சனைகளை பற்றியும் அறிந்துள்ளேன் என்றார். மேலும் இவருடன் கனேடிய பிரதிநிதிகள் மூவர் வருகை தந்திருந்தனர்.
அதன் பின் உதயனுக்கு விஜயம் மேற்கொண்ட கனேடியப் பிரதிநிதிகள் பிரதம ஆசிரியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=422422439612486287#sthash.ihPqTco4.dpuf

1 comments:

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.