புதன், 13 நவம்பர், 2013

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடித்தழிப்பு

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.   

இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது பொலிசார் தடுத்தனர். 

அதற்கு வைகோ நான் பிரச்சினை எதுவும் செய்ய வரவில்லை. என்னை கைது செய்ய வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்றார். 

பின்னர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– 

இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் பணி 3 ஆண்டுகளாக நடைபெற்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. மதுரை மேல்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் தான் இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை இந்த நினைவு முற்றத்தின் காம்பவுண்டு சுவர், நீருற்று, பூங்கா ஆகியவற்றை அதிகாரிகள் இடித்து சேதப்படுத்தி உள்ளார்கள். இதனை மன்னிக்க மாட்டேன். 

இந்த நினைவு முற்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார் உள்ளிட்டோர் சிலை உள்ளது. அதனை இடிக்க அதிகாரிகளுக்கு எப்படிதான் மனம் வந்ததோ. 

இந்த நினைவு முற்றம் தமிழர்கள் சொத்து. இது இடிக்கப்பட்டது திட்ட மிட்ட செயல். இதனை நீதிமன்றத்தில் சந்திப்போம். 

இவ்வாறு வைகோ கூறினார். 

பின்னர் அவர் அங்குள்ள மாவீரன் மன்றத்தில் அமர்ந்து இருந்தார். அவருடன் தொண்டர்களும் உட்கார்ந்து இருந்தனர். 

0 comments:

கருத்துரையிடுக

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.