சனி, 22 பிப்ரவரி, 2014

16ஆவது தேசிய புகைப்படக் கண்காட்சி யாழ் இந்து கல்லூரியில்

இக் கண்காட்சியை சரியான முறையில்  பயன்படுத்தி எமது மாணவர்கள் புகைப்படக் கலையில்  புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.



16ஆவது தேசிய புகைப்படக் கண்காட்சி யாழ் இந்து கல்லூரியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். 

இக் கண்காட்சியில் 24 நாடுகளின்  கலைஞர்களினால் எடுக்கப்பட்ட 168  புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா, பிரிட்டன், பொலிவியா உட்பட பல நாட்டு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

தேசிய புகைப்படக் கண்காட்சி அலுவலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகிவற்றின் அனுசரணையில் இக் கண்காட்சி நடைபெறுகிறது. 

நிகழ்வில் உரையாற்றிய அவைத் தலைவர், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் இயற்கை சார்ந்ததாகவும் வாழ்வியல் மற்றும் வறுமையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது மாணவர்கள் புகைப்படக் கலையில் காணப்படும் புதிய தொழிநுட்பங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார். 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர சபை முதல்வர் விருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், தேசிய புகைப்பட சங்கத்தின் தலைவர் சுனில் விக்கிரம, பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.   












0 comments:

கருத்துரையிடுக

Recent CommentsNeeravijur Yasintha

create with Yasinthaflickr badge.