மனிதம் வெல்லும் என்ற தொனிப் பொருளிலான நெல்சன் மண்டேலாவின் நினைவுப் பகிர்வுகள் நேற்று மாலை 4.30 மணியளவில் சொர்ணாம்பிகை (தியாகி அறக்கொடை நிலையம்) மண்டபத்தில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் உதவிப் பதிவாளர் சர்வேஸ்வரா,சமாதானப் பணிப்பாளர் கமலநாதன் உட்டபட பலர் கலந்துகொண்டனர்
'உலக சமாதானமும் நெல்சன் மண்டேலாவும்' என்ற தலைப்பில் சமாதானப் பணிப்பாளர் உரையாற்றுகையில்,
நீதிமன்றங்களை விலைக்கு வாங்குவது, பொருள் உள்ளவனுக்கு ஆதரவாய் பொய் சாட்சி சொல்வது, ஏழைகளை சந்தேக வழக்கில் மாட்டி விடுவது, பட்டப்பகலில் நடந்த கொலையை இருட்டடிப்புச் செய்வது, சாதி சமய வெறியைத் தூண்டி அரசியல் இலாபம் தேடுவது இதுவே இன்று நாம் காணும் உலக சூழல்.
இதனை மாற்றியமைப்பது என்பது சற்றுக் கடினமான ஒன்று. மனிதநேயத்துடன் மக்கள் வாழவேண்டும் என்ற நல்ல மனிதர்கள் சிலருடைய ஏக்கங்களும் கூட சில வேளைகளில் மழுங்கடிக்கப் படுவதால் அவர்களுடைய இலட்சியம் நிறைவேறாமல் சமாதானம் என்பது வெறும் உதட்டளவிலே மட்டும்தான் பேசப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்காக எத்தனை அமைப்புக்களை நிலைநிறுத்தினாலும் பணத்தை செலவளித்தாலும் அந்த அமைதியையும் சமாதானத்தையும் இலகுவில் எட்டமுடியாது ஆகவே உலக அமைதியை அடைய வேண்டும் என்றால் நாம் வாழு, வாழவிடு என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் இதுவே மண்டேலாவின் வாழ்க்கை எமக்கு உணர்த்தும் தத்துவமாகும் என்று தெரிவித்தார்.

இந் நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் உதவிப் பதிவாளர் சர்வேஸ்வரா,சமாதானப் பணிப்பாளர் கமலநாதன் உட்டபட பலர் கலந்துகொண்டனர்
'உலக சமாதானமும் நெல்சன் மண்டேலாவும்' என்ற தலைப்பில் சமாதானப் பணிப்பாளர் உரையாற்றுகையில்,
நீதிமன்றங்களை விலைக்கு வாங்குவது, பொருள் உள்ளவனுக்கு ஆதரவாய் பொய் சாட்சி சொல்வது, ஏழைகளை சந்தேக வழக்கில் மாட்டி விடுவது, பட்டப்பகலில் நடந்த கொலையை இருட்டடிப்புச் செய்வது, சாதி சமய வெறியைத் தூண்டி அரசியல் இலாபம் தேடுவது இதுவே இன்று நாம் காணும் உலக சூழல்.இதனை மாற்றியமைப்பது என்பது சற்றுக் கடினமான ஒன்று. மனிதநேயத்துடன் மக்கள் வாழவேண்டும் என்ற நல்ல மனிதர்கள் சிலருடைய ஏக்கங்களும் கூட சில வேளைகளில் மழுங்கடிக்கப் படுவதால் அவர்களுடைய இலட்சியம் நிறைவேறாமல் சமாதானம் என்பது வெறும் உதட்டளவிலே மட்டும்தான் பேசப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்காக எத்தனை அமைப்புக்களை நிலைநிறுத்தினாலும் பணத்தை செலவளித்தாலும் அந்த அமைதியையும் சமாதானத்தையும் இலகுவில் எட்டமுடியாது ஆகவே உலக அமைதியை அடைய வேண்டும் என்றால் நாம் வாழு, வாழவிடு என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் இதுவே மண்டேலாவின் வாழ்க்கை எமக்கு உணர்த்தும் தத்துவமாகும் என்று தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக