சனி, 7 மார்ச், 2020
வெள்ளி, 19 ஏப்ரல், 2019
சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு
யாழ்ப்பாணம், ஏப்.20
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீராவியடி நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வுகள் கழக மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெறவுள்ளன.
கிராமிய விளையாட்டுக்களான பலூன் உடைத்தல், ஊசிக்கு நூல் கோர்த்தல், யோக்கற் சாப்பிடுதல், சாக்கு ஓட்டம், பணிஸ் சாப்பிடுதல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், தலையணை சண்டை, யானைக்கு கண் வரைதல், குளம் கரை, முட்டி உடைத்தல், சங்கீத கதிரை, கயிறு இழுத்தல், கிளித்தட்டு, பிள்ளையார்ப் பேணிப் பந்து ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.
பிள்ளையார்ப் பேணிப் பந்து tவிளையாட்டு அன்றைய தினம் காலை 8 மணிக்கு நீராவியடி சிறுவர் கழக மைதானத்தில் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.(ஐ)
செவ்வாய், 16 ஏப்ரல், 2019
பாரிய தீ விபத்தால் பற்றி எரியும்
பிரான்ஸின் வரலாற்றுச் சின்னம்
பிரான்ஸின் வரலாற்றுச் சின்னம்
- சோகத்தில் அந்நாட்டு மக்கள்
பிரான்ஸில் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரடேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாகத் திகழும் இந்தத் தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தால் தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஐரோப்பியர்களின் கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்ந்துவந்த இந்தப் பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கியிருந்த இந்தத் தேவாலயத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்தத் தேவாலயத்தின் சிகரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.
கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ இதுவரையில் விவரங்கள் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "இந்தத் தீ விபத்து பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருக்கின்றது. விரைந்து செயற்பட்டு ஹெலிகொப்டர் மூலமாக அதை அணைக்க முயற்சி செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
யசிந்தாதிங்கள், 8 ஏப்ரல், 2019
சிறப்புற நடந்து நிறைவடைந்தது 4 ஆவது தமிழ் இதழியல் மாநாடு
‘‘உதயன்” ஊடக அனுசரணையுடன்
சிறப்புற நடந்து நிறைவடைந்தது
4 ஆவது தமிழ் இதழியல் மாநாடு
நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு சிறப்புடன் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது. நேற்றும், நேற்றுமுன்தினமும் இந்த மாநாடு யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றுக் காலை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மீனாட்சி பாரதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இதழியல் தொடர்பாகவும் ஊடகங்கள் தொடர்பாகவும் 11 தரப்புக்களில் ஆய்வுரைகள் வாசிக்கப்பட்டன. மாலை அமர்வுகளில் முதன்மை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன் ஆகியோரும், டெல்சி ஜாகியாமியா பல்கலைக்கழக விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக் கழக இதழியல்த் துறைத் தலைவர் கோபால் தவீந்திரன் , சென்னைப் பேராசிரியர் ம.கலாநிதி, பல்கலைக்கழக தே.ஜனனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊடகத் துறையின் சவால்கள் அவற்றுக்கான தீர்வுகள் இந்தியா, இலங்கையின் ஊடகத்துறையின் பாதிப்புக்கள் செல்வாக்குகள் தொடர்பான ஆய்வுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
ஆய்வுரைகளைச் சமர்ப்பித்த இந்திய, இலங்கை ஆய்வாளர்களுக்கு “உதயன்” குழுமத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் சான்றிதழ்களை வழங்கி மதிப்பளித்தார்.
நிகழ்வின் இறுதியில் மக்கள் இதழியல் இயக்கத்தால் 5 விடயங்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை துறைசார்ந்த பிரிவுகளுக்கும், வடக்கு ஆளுநருக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா உரையாற்றினார்.
அவர் தெரிவித்ததாவது-
விடுதலைப் புலிகளின் போராட்டத்தின்போது பத்திரிகைகள் பெரும் பங்காற்றின. ஆனால் இந்தியப் பத்திரிகைகள் மேலோங்கிச் செயற்படவில்லை. போர்க்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் போர்க் குற்றம் ஜனநாயகம், பொறுப்புக் கூறல், உண்மையைக் கண்டறிதல், அரசியல் பின்புலச் செய்திகளை வெளியிட்டமையும் உண்டு. இந்தப் போர் தொடர்பாக இந்தியாவுடன் பேச முற்பட்டனர். ஆனால் அதனைப் புலிகள் விரும்பவில்லை.
போர்க் குற்றம் இடம்பெற்ற விடயம் தொடர்பாக நான் கூறியபோது இலங்கை ஊடகம் ஒன்று அதை மிகப்பெரிய நகைச்சுவை என விவரித்து செய்தி வெளியிட்டது. இந்த நிலை மாற வேண்டும்- என்றார்.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உரையாற்றினார்.
அவர் தெரிவித்ததாவது-
கடந்த 35 வருடங்களாக ஊடக விடயங்களில் துன்பங்களை நான் நன்கு அறிவேன். நாடாளுமன்றத்திலும் இந்த விடயத்தில் அண்மையில் தெரிவித்தனர். தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடங்கு முறைகள் தொடர்பாக நீதி கிடைக்கவில்லை. அரசு பெரும்பான்மையின மக்களின் நலன்கள் தொடர்பிலேயே அக்கறை காட்டுகின்றது. - என்றார்.
செவ்வாய், 2 டிசம்பர், 2014
சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினம் 2014
உலகமயமாக்கலும்
மாற்றுவலுவுடையோரும்
இன்று சர்வதேச
மாற்றுவலுவுடையோர் தினம் 2014 இன்று உலகம்
முழுக்க “நிலைத்திருக்கும்
அபிவிருத்திக்கான தொழில்நுட்பத்தின் உறுதிப்பாடு;” எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.
இன்று இயலாமைப்
பிரச்சினை உள்ள மக்கள் 1 பில்லியன்
மக்கள் உள்ளனர். உலகமுழுவதும் ஊனமுற்ற நபர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் உடல்
தடைகள், சமூக பொருளாதாரப்
பிரச்சினைகள், மனோபாவத் தடைகள்
எனப் பல தடைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
உலக சனத்தொகையில்
20வீதமானவர்கள்
வறுமைக்கோட்டின் கீழ்வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள்
ஊனமுற்றநபர்களாகக் காணப்படுகின்றனர்.
1992 ஆம் ஆண்டு முதல்
சர்வதேச ஊனமுற்றோர் தினம் வருடாவருடம் இயலாமை பிரச்சினைகள் உள்ளவர்களை
புரிந்துகொள்ளுதல் அவர்களது கண்ணியம், உரிமைகளுக்கான ஆதரவு மற்றும் ஊனமுற்ற நபர்களின் வாழ்வை மேம்படுத்தும்
நோக்கத்தை அடையவேண்டியுள்ளது. இத்தகைய தினங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம்
அரசியல் பொருளாதாரம், சமுக, பண்பாட்டு வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும்
ஊனமுற்ற நபர்களின் ஒருங்கிணைப்பு பெறப்படவேண்டும்.
மனிதன்
நாகரீகமடைய தொடங்கிய காலத்திலிருந்து தொழில்நுட்பமும் மெல்ல மெல்ல வளர்ச்சியடைய
தொடங்கியது. எம்பொழுதும் மக்கள் வாழ்க்கையுடன் இணைந்துள்ளது. இன்று தொழில்நுட்ப
புரட்சி உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள், கட்டிடங்கள், அணுகும் வசதிகள் என பல்வேறு பரிமானங்களிலும்
வளர்ச்சியடைந்துவருகின்றது. மனிதர்கள் தம் வாழ்க்கையுடன் தொழில்நுட்பத்தை இன்று
அன்றாடம் பயன்படுத்திவருகின்றார்கள்.
தொடர்பாடல்
தொழில்நுட்மானது மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றியமை;த்து வருகின்றபோதிலும் அனைத்து மக்களின்
வாழ்க்கைத்தரமும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் அவர்களது வாழ்க்கைத் தரம்
உயர்வடையவில்லை. இந்தகைய முன்னேற்றம் அனைவரும் பயன்படுத்தமுடியாது இருக்கின்றது.
ஒரு நாடு
அபிவிருத்தியடைய வேண்மென்றால் அனைவருடைய பங்கும் அவசியமாகின்றது. அபிவிருத்தியை
ஒரு உயர்வான தொழில்நுட்பத்தினூடே முன்னெடுக்கவேண்டியுள்ளது. அத்தகைய
தொழில்நுட்பமான அபிவிருத்தி அனைவருக்கும் பொருத்தமானதாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளாந்தம்
அதிகரித்துவரும் வலுவிழந்த நபர்களை சமுகத்துடன் இணைக்கும் வகையில்; வசதிகளை ஏற்படுத்தவேண்டிய சூழ்நிலை
காணப்படுகின்றது.
இன்று
மேலத்தேசங்களில் ஊனமுற்றவர்கள் சமத்துவம் அடைவதற்கான அபிவிருத்தி திட்டங்கள்
உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
வளர்ச்சியடைந்த
நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திட்டங்கள் பல அவற்றில் சிலவற்றை
ஒப்பீட்டு ரீதியில் நோக்கவேண்டியதன் அவசியம் இங்கு காணப்படுகின்றது.
வாகனத்
தரிப்பிடம்
மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை
நிறுத்துவதற்காக விசேட வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தரிப்பிடங்கள்
வீதிகளிலும் பொதுவிடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
சாய்தளம்
அபிவிருத்தியடைந்த
நாடுகளில் சாய்தளம் (சுயஅp) அழகாகவும்
வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. 16.10..2014ஆம் திகதிக்கு முன்னர் சகல பொதுக்கட்டங்களிலும்
சாய்தளம் அமைக்கப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளபோதும் எத்தனை
வீதம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என்பது கேள்வியாகவே இருக்கின்றது.
அணுகும்
வசதியுள்ள மலசல கூடம்
பொது இடங்களில்
வலுவிழந்த நபர்களிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மலசலகூடங்களிற்கு முச்சக்கரவண்டி
மற்றும் சக்கர நாற்காலிகளுடன் சென்றுகூட தமது தேவைகளை நிறைவேற்றிவிடக்கூடிய
வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதைக் பார்க்கமுடிகின்றது. நாம் வாழும் பகுதிகளில்
இத்தகைய வசதிகளைப் பார்க்கமுடிவதில்லை
போக்குவரத்து
நிலை
போக்குவரத்து
சேவைகளில் ஈடுபடும் வாகனங்களில் வலுவிழந்த நபர்களிற்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள
போதிலும் அதனை அனுபவிக்கின்ற வகையில் அவை வழங்கப்படுவதில்லை. அறிவுறுத்தல்களை பல
நடத்துனர்களோ, சாரதிகளோ,
ஏனையவர்களோ கண்டுகொள்வதில்லை.
இதனால் வலுவிழந்த நபர்கள்; தினமும்
அசௌகரியங்களை அனுபவித்துவருகின்றனர். அதேவேளை சக்கரநாற்காலியில் வரும் வலுவிழந்த
நபர்களிடம் அவர்களுக்கும் அவர்களுடைய சக்கர நாற்காலிக்கும் பணம் கேட்கும் நிலையும்
காணப்படுகின்றது. நடக்கவேமுடியாத நிலையில் சக்கரநாற்காலியை பயன்படுத்துபவர்களிடம்
கட்டணம் அறிவிடுவது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமே.
தொழில் நிலை
1988ஆண்டின்; பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அரச
மற்றும் தனியார் நிறுவனங்களில் வலுவிழந்த நபர்கள் தொழில் செய்யக்கூடிய ஆற்றலும்,
திறமையும் தகுதியும்
இருக்குமானால் 3வீதம் முன்னுரிமை
அடிப்படையில் அவர்களை உள்வாங்க வேண்டும். வலுவிழப்பைக் காரணமாகக் காட்டி அவர்களை
நிராகரிக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும், இன்னும் வலுவிழந்த நபர்களை தொழிலுக்கு
இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இதேவேளை கொரியா நாட்டில் 10வீதம் வலுவிழந்த நபர்களிற்கு தொழில் முன்னுரிமை
வழங்கவேண்டும். வழங்க மறுக்கும் நிறுவனங்கள் அரசில் பதிவுசெய்யமுடியாது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆலயம்
எமது
பிரதேசங்களில் காணப்படும் பல ஆலயங்களில் வலுவிழந்த நபர்கள் வழிபடக்கூடிய அணுகும்
வசதிகள் காணப்படுவதில்லை. ஆலயங்களிற்கு வருவோர் வெளியில் நின்று வழிபட்டுவிட்டு
செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது அதிகமான ஆலயங்கள் புனர்நிர்மாணம்
செய்யப்பட்டுவருகின்றன. அவ்வேளையில் கூட வலுவிழந்த நபர்கள் தொடர்பான வசதிகள்
ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அப்பணிகளில் ஈடுபடுபவர்களிற்கு எழுவதில்லை.
திருவிழாக்காலங்களில் அவர்கள் வீதியில் எங்கோ ஒரு மூலையில் நின்று வழிபடுவதைக் காணக்கூடியதாக
இருக்கின்றது,இதேவேளை
வெளிநாடுகளில் ஆலயங்கள் அமைக்கும்போது இத்தகைய விடயங்கள் கருத்தில்கொள்ளப்பட்டு
அதற்கேற்றால் போல் வசதிகள் செய்யப்பட்ட பின்பே அந்த ஆலயங்கள் திறப்பதற்கான அனுமதி
வழங்கப்படுகின்றன.
சந்தைகள்
சந்தை
வியாபாரத்தில் பல மாற்றுவலுவுடையோர் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு அணுகும் வசதிகள்
இல்லாததால் தினமும் அசௌகரியங்களை சந்தித்துவருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்ட
சந்தைகளில் கூட விசேட வசதிகள் அமைக்கப்படவில்லை பொது இடங்களை நிர்மானிக்கும் போது
அல்லது புனர்நிர்மானம் செய்யும் போது இத்தகைய விடயங்கள் கருத்தில்
கொள்ளப்படவேண்டும் என வெலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும்
ஏற்ற அபிவிருத்தி
தொழில்நுட்பத்துடன்
கூடிய நிலைத்திருக்கும் அபிவிருத்தியை உருவாக்குவதன் மூலம் வலுவிழந்த நபர்களையும்
உள்ளடக்கத்தக்க அணுகும் வசதிகளையும் ஏற்படுத்தி அனைவரும் சமத்துவம்மிக்க சமுதாயத்தை
கட்டியெழுப்புதல் இதன் பிரதான இலக்காகக் கொள்ளப்படுகின்றது.
வலுவிழந்த
நபர்கறிற்கேற்ப வாய்ப்புக்களை உருவாக்கி அவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், திறமை, போன்ற பல்வேறு வகையிலும் முன்னேற்றம் அடையக்கூடிய அபிருத்தி
நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கவேண்டியது அவசியமான தொன்றாக இருக்கின்றது,
தொழில்நுட்பத்துடன்
கூடிய நிலைத்திருக்கும் அபிவிருத்தியை உருவாக்குவதன் மூலம் வலுவிழந்த நபர்களையும்
உள்ளடக்கத்தக்க அணுகும்வசதிகளையும் ஏற்படுத்தி அனைவரும் சமத்துவம்மிக்க சமுதாயத்தை
கட்டியெழுப்புதல் இதன் பிரதான இலக்காகக் கொள்ளப்படுகின்றது.
ஏனையவர்கள்
அனுபவிக்கின்ற சமுக பொருளாதார, மனோபாவ மற்றும்
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இவர்களின் வாழ்க்கை;கு ஏற்றால் போல் அமையுமானால்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையும் மாற்றிவிடமுடியும்.
இவர்களின்
வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற சமுக பொருளாதார மனோபாவம் மற்றும் தொழில்நுட்பக்
குறைகளை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு அனைவரையும் சாரும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



